|
Post by Administrator-BR on Aug 5, 2022 15:38:50 GMT -5
மரண அறிவித்தல்திருமதி கமலாம்பிகை தர்மலிங்கம் (லீலா) அரியாலை கச்சேரி நல்லூர் வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், நோர்வே - துரொண்னியத்தை (Norway -Trondheim) வசிப்பிடமாகக் கொண்ட கமலாம்பிகை தர்மலிங்கம் (லீலா) அவர்கள் 03.08.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை தர்மலிங்கம் (புகையிரதத் தினணக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும், காலஞ்சென்ற மகேஸ்வரன், கோணேஸ்வரன் (நோர்வே), காலஞ்சென்ற ரதீஸ்வரன் (மாவீரன் தோமஸ்), சாந்திமதி கேதீஸ்வரன் (ஜேர்மனி) நகுலேஸ்வரன் (பாபு - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னார் சாரதா (நோர்வே), கேதீஸ்வரன் (ஜேர்மனி), சுமித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற நேசமணி, இராசமணி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், விசாகன், விபுலன், சாரங்கன் (நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், சயந்தன், சனந்தன், விமலி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், பானுஜா விசாகனின் அன்புப் பேத்தியும், அர்ச்சன், அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவர் காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்,செல்வநாயகம், சிங்கராசா ஆகியோரின் மைத்துனியும், பவளராணியின் அன்புச் சகலியும் ஆவார். அன்னாரின் ஈமைக் கிரியை 10.08.2022 புதன்கிழமை 10 மணிக்கு நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கிரியை முகவரி பின்னர் அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு:கோணேஸ்வரன் - மகன் | +4791135903 | நகுலேஸ்வரன் - மகன் | +16475759589 | சாந்தி - மகள் | +4915228718605 |
|
|