|
Post by Administrator-BR on Jun 6, 2009 19:59:29 GMT -5
திருமதி ஆலாலசுந்தரம் தேவநாயகி யாழ்ப்பாணம், கச்சேரியடி, இல.12, கச்சேரிலேனைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் தற்போது கொழும்பு, கல்கிசை யில் வசித்துவந்தவருமான திருமதி ஆலாலசுந்தரம் தேவநாயகி நேற்றுமுன் தினம் (02.06.2009) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராம நாதன் இராசம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிய ரின் மூத்த மருகளும் காலஞ்சென்ற ஆலாலசுந்தரத்தின் (விவசாய விரிவாக்க போதனாசிரியர்) அன்பு மனைவியும் யசோதையின் (ஆசிரியை, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்) அன்புத் தாயும் திருமதி தவஞானம் தேவராணி, காலஞ்சென்றவர்களான இராமநாதன் தியாகராசா, இராமநாதன் இராசலட்சுமி மற்றும் திருமதி பாலசிங்கம் மகாலட்சுமி, திருமதி சாந்தராஜா ஸ்கந்தசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர், யா/ கனகரத்தினம் ம.ம.வி.) ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் காங்கேயன், அருளம்பலம் லோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(04.06.2009)வியா ழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: திருமதி எஸ். சாந்தராஜா (சகோதரி). 400/1, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
|
|
|
Post by Kanagaratnam K on Jan 26, 2013 8:56:13 GMT -5
Please accept our heartfelt condolences - Kanagaratnam family Canada
|
|