|
Post by Administrator-BR on Feb 3, 2021 10:17:11 GMT -5
மரண அறிவித்தல்திரு கணபதிப்பிள்ளை சண்முகராஜா இளைப்பாறிய கிராம சேவகர், இளைப்பாறிய ஆசிரியர், மூத்த நாடக கலைஞர், சமூக சேவையாளர், புல்லாங்குழல் வித்துவான் பிறப்பு: 27 ஆடி 1922 (99 வயது) இறப்பு: 03 மாசி 2021 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகராஜா அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - முத்தம்மா தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சௌபாக்கியவதி, சிவசுந்தரம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலாம்பிகை சண்முகநாதன் (சரசு ரீச்சர்) அவர்களின் உடன்பிறவா சகோதரனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், பாலசுந்தரம் மற்றும் கனகாம்பிகை, ஜெயலட்சுமி, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும், சௌந்தரகலாநிதி, சௌந்தரகமலாகரன்(கமல்), சௌந்தரராஜன், சௌந்தரராணி, சௌந்தரஸ்ரீதரன்(ஸ்ரீ) ஆகியோரின் தாய் மாமனும், காலஞ்சென்ற லோகானந்தா, மேனகா, தயானந்தா, ருத்திரானந்தா, பாலேந்திரா, தேவிகா, ரவீந்திரா, காலஞ்சென்ற லோகேந்திரா, குமணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மதுமதி, கர்ணன், சுகர்ணன், சுமதி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை 04-02-2021 அன்று 604 நாவலர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 3 மணியளவில் அரியாலை சிந்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:பாலாம்பிகை சண்முகநாதன் | +94212216836 | மேனகா தங்கராஜா | +94772826707 |
|
|
|
Post by Kuganathan, London on Feb 3, 2021 11:00:05 GMT -5
அரியாலையின் பெருமைக்குரிய மூத்த குடிமகன், அதன் வளர்ச்சி அனைத்தையும் கண்ட ஒரே ஒரு ஊரவர், இன்று மறைந்துவிட்டார். அவரின் பூரணமான வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது. அறுபதுகளில் அவர் ரெயில் பாதைக்கருகில் கிராம சேவகர் அலுவலகம் வைத்திருந்தபோது எனக்கு ஒரு உதவி செய்திருந்தார். மறக்க முடியாது. அவர் புகழ் வாழ்க.
|
|
|
Post by Muttiah.Theivendra on Feb 3, 2021 12:48:45 GMT -5
Deepest Sympathies, Uncle& Aunty was living in front of our house when we were living along Perinpanayagam lane in Ariyalai during our schooling. Aunty and Uncle were very helpful to us. Aunty used to talk to my mother across the barbwire fence at length. He was an Amazing gentleman who used to excercise to keep himself fit. When I was a boy ,I used go and watch him training. No wonder he lived till 99. We need to celebrate his life. May his soul rest in peace.From Theivendra family
|
|
|
Post by Mr & Mrs Ravindra on Feb 3, 2021 13:25:55 GMT -5
Our deepest symathies
|
|
|
Post by RAVI VEERASINGAM on Feb 3, 2021 17:57:20 GMT -5
WE RESPECT TO OUR " MANNIN MAITHARUKU "
|
|
தம்பிப்பிள்ளை துரைசிங்கம்
Guest
|
Post by தம்பிப்பிள்ளை துரைசிங்கம் on Feb 4, 2021 0:53:23 GMT -5
நூறாண்டு வாழ வேண்டுமென்பதே அவரது இறுதி ஆசை. ஆசை நிறைவேறாமல் போனதில் எங்களக்குப் பெரும் ஏமாற்றம். நான் வயல்களில் இளமைத் துடிப்புடன் வேலை செய்து கொண்டிருப்பதை மனமார வாழ்த்திய ஒரு பெருமகன். அவரைக் காண வேண்டுமெனும் எனது ஆவல் மூன்று நாட்களின் பின்னர் தான் நிறைவேறியது. அவர் அப்பொழுது என்னை அடையாளம் கண்டு எழுந்து நின்று வாழ்த்தி ஆனுப்பி வைத்தார். கமெராவில் அவரைப் பதிய வேண்டுமென்ற எனது ஆசையை நிறைவேற்ற விடாது சென்று விட்டமை என்னை வருத்துகின்றது. அவரது ஆன்மா நிம்மதியான உலகிற்குச் சென்று விட்டது.
|
|
Jeya Jeyaratnam. UK
Guest
|
Post by Jeya Jeyaratnam. UK on Feb 4, 2021 5:19:18 GMT -5
Our Deepest Sympathies to all the family and friends.
Jeya, Mahendran, Logan and the families. ( Children’s of Late Mr Shorter Mahadeva & Mrs. Gunanayaki Mahadeva of Brodie Lane )
|
|