Post by Administrator-BR on Sept 5, 2017 20:53:27 GMT -5
மரண அறிவித்தல்
அமரர் ஜெகதீஸ்வரி தருமராஜா
அமரர் ஜெகதீஸ்வரி தருமராஜா
திருகோணமலை சாம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரியலையை வாழ்விடமாகவும், தற்போது ஹொலண்டை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி (வவ்வாச்சி) தருமராஜா (வவா) அவர்கள் 03/09/2017 (ஞாயிறு) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான முன்னாள் கிராமசபைத் தலைவர் நா. சி. சரவணமுத்து இரத்தினம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலம்சென்றவர்களான பரராஜசிங்கம் சரஸ்வதி தம்பதியினரின் மருமகளும், காலம்சென்ற தருமராஜாவின் பாசமிகு துணைவியாரும், சுரேஸ் (கனடா), ரஜேஸ் (லண்டன்), கருணேஸ் (ஹொலண்ட்), ஜனேஸ் (ஹொலண்ட்), லாவண்யா (ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலம்சென்றவர்களான அம்பிகைபாலன், சிவதாஸ் மற்றும் மீனாட்சிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை (முன்னாள் கணக்காளர் - மூதூர் ப.நோ.கூ.ச), காலம்சென்ற ரகுநாதன், மற்றும் குகதாஸ், காலம்சென்ற நாகநாதன் மற்றும் சாரா புவனேஸ்வரன் (சிரேஸ்ட விரிவுரையாளர், பொது செயலாளர், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்), புவனேஸ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியும், காலம்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும் மாணிக்கராஜா (ஓய்வுபெற்ற படவரைஞர்), காலம்சென்ற லோகேஸ்வரி மற்றும் தனராஜா (நில அளவையாளர்), புஷ்பராஜா (நில அளவையாளர்), வியாழேஸ்வரி (படவரைஞர்) ஆகியோரின் மைத்துனியும் , விஜிதா, கலாஜினி, நிதர்சினி, ஜோய்ஸ், ரமணன் (தர்மபாலன்) ஆகியோரின் அன்பு மாமியும் மற்றும் நிதிலன், இந்துஸா, அரிணி , அரண், அபீரன், அஜய், மிலா, லிவியா, நிலான், அனுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஹொலண்டில் Uitvaartcentrum Weg langs de Begraafplaatsen 5. 6815 AZ Arnhem உள்ள மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. (தினமும் மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அஞ்சலி செலுத்த முடியும்).
இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் 09/09/2017 சனிக்கிழமை அன்று Crematorium Waalstede-Nijmegen எனும் இடத்தில் நடைபெற்று பிற்பகல் 04:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கருணேஸ் (மகன்) | +31647036269 | Holland (Netherlands) |
சுரேஸ் (மகன்) | +14169370445 | Canada |
லாவண்யா (மகள்) | +31647054367 | Holland (Netherlands) |
சாரா புவனேஸ்வரன் (சகோதரன்) | +94773126807 | Sri Lanka |